ஒளிமயமான எதிர்காலத்திற்கு காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள்: சோனியா வலியுறுத்தல்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள்: சோனியா வலியுறுத்தல்
ADDED : மே 07, 2024 04:44 PM

புதுடில்லி: ''அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது. அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள்'' என வாக்காளர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் வெளியிட்ட வீடியோவில் சோனியா கூறியதாவது: இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள் வேலையின்மையை எதிர்கொள்கிறார்கள்; பெண்கள் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள்; தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.,வால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவதில் மட்டுமே அவர்களின் கவனம் உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக வெறுப்புணர்வை வளர்த்துள்ளனர்.
அனைவரின் முன்னேற்றத்திற்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் காங்கிரஸ் கட்சியும் நானும் எப்போதும் போராடி வருகிறோம். அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது. அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள், ஒன்றிணைந்து வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.