ஓட்டு இயந்திரத்தை மாற்றினாலும் பலனில்லை: காங்கிரசுக்கு பா.ஜ., பதில்
ஓட்டு இயந்திரத்தை மாற்றினாலும் பலனில்லை: காங்கிரசுக்கு பா.ஜ., பதில்
ADDED : நவ 27, 2024 06:48 PM

புதுடில்லி: '' மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை மாற்றுவோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார். ஆனால், அக்கட்சியை மக்கள் ஓரங்கட்டிவிட்டனர், '' என பா.ஜ., பதிலடி கொடுத்து உள்ளது.
இது தொடர்பாக டில்லியில் நிருபர்களை சந்தித்த பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:நேற்று அரசியலமைப்பு நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை மாற்றிவிட்டு, ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வருவோம் என கூறியுள்ளார். நீங்கள் இவிஎம் இயந்திரத்தை நீக்குகிறீர்களோ இல்லையோ... ஆனால், காங்கிரசை மக்கள் ஓரங்கட்டி விட்டனர். பெரும்பாலான மாநில தேர்தலில் மக்கள் காங்கிரசை புறந்தள்ளிவிட்டனர்.
இவிஎம் இயந்திரத்தால், தலித்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகளின் ஓட்டுக்கள் வீணாவதாக கார்கே போன்ற மூத்த தலைவர்கள் கூறுவது ஆச்சர்யம் அளிக்கிறது. மேற்கண்ட மக்கள் படிக்காதவர்கள், இவிஎம் இயந்திரத்தை பயன்படுத்த தெரியாது என கார்கே மற்றும் காங்கிரசார் நினைக்கின்றனரா? இதுபோன்ற சிந்தனை அவர்களை அவமானப்படுத்துவது ஆகும்.
பா.ஜ., வெற்றிக்கு காரணம் 'EVM' .E - ENERGY,
V-VIKAS,
M- MEHNAT( முயற்சி)
காங்கிரஸ் தோல்விக்கு காரணம் 'RBM'
R- Rahul
B- Bekar( worthless)
M- Managementஇவ்வாறு சம்பித் பத்ரா கூறினார்.

