தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் கமிஷன் விளக்கம்

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் கமிஷன் விளக்கம்

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் கமிஷன் விளக்கம்


ADDED : செப் 18, 2025 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 12:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:பீஹாரில், இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டது. வீடு, வீடாக சென்ற அதிகாரிகள், வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்து பட்டியலில் திருத்தங்கள் மேற்கொண்டனர்.

இதன்படி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து, அவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

கட் ஆப் தேதி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்வதற்கு பீஹார் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, நாடு முழுதும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, தேர்தல் கமிஷன் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நம் நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில், 2002 - 2004க்கு இடையில் வாக்காளர் பட்டியலில் கடைசியாக சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது. கடைசியாக திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு, அடுத்து நடக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கட் - ஆப் தேதியாக கருதப்படும்.

கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை, தங்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவேற்றும்படி, மாநில அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

12 ஆவணங்கள் பெரும்பாலான மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், தங்கள் மாநிலங்களில் நடந்த கடைசி சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்பதால், அவர்கள் எந்த ஆவணத்தையும் அளிக்க வேண்டியதில்லை.

பீஹாரில், 2003ம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் இடம்பெற்ற 4.96 கோடி வாக்காளர்கள், தங்கள் பிறந்த தேதி மற்றும் வசிப்பிட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மீதமுள்ளவர்கள், 12 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us