3 மாநிலங்களில் தேர்தல் நிறைவு: புதுச்சேரியில் அதிக ஓட்டுப்பதிவு
3 மாநிலங்களில் தேர்தல் நிறைவு: புதுச்சேரியில் அதிக ஓட்டுப்பதிவு
UPDATED : ஏப் 09, 2026 06:21 PM
ADDED : ஏப் 09, 2026 07:44 AM

புதுடில்லி : அசாம், கேரளம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (ஏப்ரல் 09) நடந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, கேரளாவில் 75.01, புதுச்சேரியில் 86.92%, அசாமில் 84.42% ஓட்டுப்பதிவாகி இருக்கிறது.
புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் இன்று (ஏப்ரல் 09) நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் செய்துள்ளனர். 3 இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
கேரளாவில் முதல்முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்கப்பட்டது.
3 மாநில கள நிலவரம் குறித்து ஓர் சிறப்பு அலசல்!
புதுச்சேரி
மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலை விட அதிகம் ஆகும்.
கேரளம்
கேரளாவில், மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின், 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 1.32 கோடி பேர் ஆண்கள். 1.39 கோடி பேர் பெண்கள். 32,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 140 தொகுதிகளில், 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 75. 01 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.
அசாம்
வடகிழக்கு மாநிலமான அசாமில், 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்தம், 2.50 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 1.25 கோடி பேர் ஆண்கள்; 1.25 கோடி பேர் பெண்கள்; 318 பேர் மூன்றாம் பாலினத்தவர். ஓட்டுப்பதிவுக்காக, 31,490 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. . 126 தொகுதிகளில், 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 84.42 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து
ஓட்டளிப்பதில், கேரள மக்கள் மிகப்பெரிய அளவில் பங்கேற்பதை உறுதிசெய்யுமாறு நான் அறைகூவல் விடுக்கிறேன். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் பெருமளவில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு நான் வலியுறுத்துகிறேன். குறிப்பாக, ஜனநாயகச் செயல்முறையை வலுப்படுத்த நமது இளைஞர்களுக்கும் பெண் வாக்காளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது. அசாம் மக்கள் பெருமளவில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மாநிலத்தின் இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் உற்சாகத்துடன் பங்கேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
புதுச்சேரி தேர்தல் நிலவரம்; களத்தில் தினமலர்.
