உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : பிப் 14, 2013 08:39 AM
ADDED : பிப் 14, 2013 08:20 AM
அ நிறம் | அளவு
அகர்தலா : 60 இடங்களுக்கான திரிபுரா சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக திரிபுரா முதல்வராக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாணிக் சர்கரை தோல்வி அடையச் செய்து 20 ஆண்டுகளுக்கு பிறகு திரிபுராவில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முழு மூச்சுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
