UPDATED : ஏப் 03, 2025 03:24 PM
ADDED : ஏப் 03, 2025 01:13 AM

புதுடில்லி: வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா மீது லோக்சபாவில் நீண்ட நேரம் நடந்த விவாதத்திற்கு பின் டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்று நிறைவேறியது.
சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இவை, இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.
இச்சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில் நேற்று (ஏப்.,2) பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், மசோதா தாக்கல் ஆனபோது அரசு தரப்பும், எதிர்க்கட்சி எம்பி.,க்களும் காரசாரமாக விவாதம் மேற்கொண்டனர். இந்த மசோதாவிற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நள்ளிரவு 12:15 மணியளவில் மசோதா மீது டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது.
டிவிசன்-1
முதல் டிவிசனில், மொத்தம் 390 பேர் ஒட்டளித்தனர். மசோதாவிற்கு ஆதரவாக 226 உறுப்பினர்களும், எதிராக 163 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஒருவர் வாக்கெடுப்பை புறக்கணித்தார்.
டிவிசன் -2
இரண்டாவது டிவிசனில், மொத்தம் 439 பேர் ஒட்டளித்தனர். மசோதாவிற்கு ஆதரவாக 196 பேரும், எதிர்த்து 243 பேர் ஒட்டளித்தனர். தொடர்ந்து ஒட்டெடுப்பு நடைபெற்ற து.
பல்வேறு கட்ட விவாதங்களுக்குப்பிறகு இறுதியாக வக்ப் மசோதாவிற்கு ஆதரவாக 288பேர் ஓட்டளித்தனர். மசோதாவை எதிர்த்து 232பேர் ஓட்டளித்தனர். இதனையடுத்து வக்ப் மசோதா நிறைவேறியதாக சபாநாகயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.