தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேடப்பட்ட குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது

தேடப்பட்ட குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது

தேடப்பட்ட குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது


ADDED : டிச 26, 2024 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அமிர்தசரஸ்:பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டவர், கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து, பஞ்சாப் மாநிலம் தரன்தரன் நகர டி.எஸ்.பி., கமல்ஜீத் சிங் கூறியதாவது:

ஜஸ்மத்பூர் மேம்பாலம் அருகே நேற்று இரவு வழக்கமான வாகன சோதனை நடத்தப்பட்டது. நேற்று அதிகாலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள மங்கா என்ற லுவ்கரன் சிங் ஒரு வாகனத்தில் வந்தார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். ஆனால், லுவ்கரன் சிங் போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். உதவி சப்--இன்ஸ்பெக்டர் குர்தீப் சிங் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். போலீசார் கொடுத்த பதிலடியில் லுவ்கரன் காலில் குண்டு பாய்ந்தது. சரிந்து விழுந்த அவரை, போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்து, துப்பாக்கி மற்றும் அவர் வந்த கார் ஆகியவை பறிமுதல் செய்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லுவ்கரனுக்கு, அறுவைச் சிகிச்சை செய்து குண்டு அகற்றப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன், நீதிமன்றத்தி ஆஜர்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us