தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தேடப்பட்ட குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது

தேடப்பட்ட குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது

தேடப்பட்ட குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது


ADDED : பிப் 27, 2024 09:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 09:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:நீண்ட மாதங்களாக தேடப்பட்ட குற்றவாளி, கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டார்.

டில்லி மாநகரப் போலீசின் தலைமைக் காவலரை சுட்டுக் கொன்றது மற்றும் ஹரியானா எம்.எல்.ஏ., வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆகிய வழக்குகளில், ஜானு என்ற ஷாகிர் போலீசாரால் நீண்ட மாதங்களாக தேட-ப்பட்டு வந்தார்.

இந்நிலையில், டில்லி மாநகர போலீசின் சிறப்புப் படை மற்றும் ஹரியானா மாநில போலீஸ் படை ஆகியவை இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியது.

ஹரியானா மாநிலம் நுாஹ் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை, பைக்கில் சென்ற ஷாகிரைப் பிடிக்க முயன்றனர்.

அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் துவங்கினார். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.

நீண்ட நேரம் நடந்த சண்டைக்குப் பின், ஷாகிரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஷாகிர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஉள்ளார்.

ஷாகிரை பிடித்த போலீசாருக்கு 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us