ADDED : நவ 22, 2025 12:31 AM
புதுடில்லி: தொடர் கொலைகள் மற்றும் கொள்ளை உட்பட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளியை, மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில், டில்லி போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சோஹ்ரப். இவர் மீதும் இவரது இரண்டு சகோதரர்கள் மீதும் உ.பி.,யின் பல மாவட்டங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2005ம் ஆண்டு லக்னோவில் மூன்று கொலைகளைச் செய்ததாக கைது செய்யப்பட்ட கைது செய்யப்பட்ட சோஹ்ரப், இந்த ஆண்டு துவக்கத்தில் பரோலில் சென்று தலைமறைவானார். பெயர் மற்றும் உருவ அமைப்பை மாற்றி, மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் வசித்தார்.
டில்லி மாநகரப் போலீசின் தனிப்படை போலீசார் ரகசியத் தகவல் அடிப்படையில், கொல்கட்டாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். கடந்த, 19ம் தேதி சோஹ்ரப்பை கைது செய்து டில்லி அழைத்து வந்தனர். விசாரணை நடக்கிறது.

