sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வக்பு சட்டத்திருத்த மசோதா: ‛இண்டியா' கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

/

வக்பு சட்டத்திருத்த மசோதா: ‛இண்டியா' கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

வக்பு சட்டத்திருத்த மசோதா: ‛இண்டியா' கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

வக்பு சட்டத்திருத்த மசோதா: ‛இண்டியா' கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

61


UPDATED : ஆக 08, 2024 02:28 PM

ADDED : ஆக 08, 2024 01:52 PM

Google News

UPDATED : ஆக 08, 2024 02:28 PM ADDED : ஆக 08, 2024 01:52 PM

61


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வக்பு வாரியத்தில் திருத்தம் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவிற்கு ‛ இண்டியா' கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன

இம்மசோதா குறித்து லோக்சபாவில் அக்கட்சி எம்பிக்கள் பேசியதாவது:

தேர்தலை மனதில் வைத்து

Image 1304884காங்கிரஸ் கட்சி எம்.பி., வேணுகோபால் பேசியதாவது: இந்த மசோதா அரசியல் அமைப்பு, கூட்டாட்சி அமைப்பு, மத சுதந்திரம் மீதான தாக்குதல். மற்ற மதத்தினரின் நம்பிக்கையை மதிக்க வேண்டும். ஹிந்து கோயில்களை நிர்வகிக்கும் அமைப்பில் ஹிந்து அல்லாதவர்கள் இடம்பெற முடியுமா? மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அநீதி


சமாஜ்வாதி எம்.பி., பேசுகையில், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக இம்மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. வக்பு வாரிய சொத்துகளை எடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இம்மசோதா மூலம் அரசியலமைப்பின் ஆன்மாவை கொல்ல முயற்சி செய்கிறது. முஸ்லிம் மக்களுக்கு ஏன் அநீதி இழைக்கிறீர்கள். அவர்களின் சுதந்திரத்தில் ஏன் தலையிடுகிறீர்கள்?

அச்சம்

Image 1304885

தி.மு.க.., எம்.பி., கனிமொழி பேசியதாவது : பார்லிமென்ட் வரலாற்றில் இந்நாள் துயரமான நாள். இம்மசோதா அரசியலமைப்புக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது. மத ரீதியிலான சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை பறிக்கக்கூடாது. பல்வேறு மொழி, மதம் உள்ளிட்டவற்றை கொண்ட நமது மதச்சார்பற்ற நாடு என்ற பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 25,26 ஐ மீறுவதாக இம்மசோதா உள்ளது.முஸ்லிம் இல்லாதவரை வக்பு வாரியங்களில் இடம்பெறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து கொண்டு வரப்பட்டு உள்ளது. சொத்துகள் யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிப்பது குறித்த அச்சம் உருவாகி இருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை மீறுவதாக உள்ளது. ஹிந்து கோயில் தொடர்பானவற்றில பிற மதத்தவரை அனுமதிப்பீர்களா? குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை உறுப்பினர்களாக எப்படி சேர்க்க முடியும்

தவறு

Image 1304888தேசியவாத காங்., கட்சியின் சுப்ரியா சுலே பேசும்போது, விவாதம் இல்லாமல் இம்மசோதாவை கொண்டு வந்தது தவறு. நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து உள்ளது. மசோதாவில் குறிப்பிட்ட அம்சங்கள் மீடியாவில் கசிந்தது எப்படி? இதனை திரும்பப் பெற வேண்டும். சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்.

அதிகாரம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது பஷீர் பேசுகையில் அனைத்து அதிகாரங்களும் மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மதசார்பற்ற தன்மையை பாதிக்கும்

உள்நோக்கம்

Image 1304886விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பேசியதாவது: உள்நோக்கத்தோடு இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அன்னியர்களை போல் காட்டும் முயற்சி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். இது வழங்கிய சுதந்திரம், உரிமைகளை தட்டிப்பறிக்கக்கூடிய வகையில் வேண்டும் என்று திட்டமிட்டு தலையிடுகிறது. வக்பு போர்டு தனித்து இயங்கி வருகிறது. ஒவ்வொரு மதத்திற்கும் அந்த சுதந்திரம் உள்ளது.அரசியலமைப்பு சட்டம், மதசார்பின்மையை உயர்த்தி பிடிக்கும் நிலையில்,அரசு மதம் சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பது, மதங்களின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆபத்தானது. மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடியது. இம்மசோதாவை திரும்பப்பெற வேண்டும் அல்லது பார்லிமென்ட் நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Image 1304887

சவால்

ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் பேசுகையில், இம்மசோதா எப்படி முஸ்லிம் மதத்திற்கு எதிரானது. இது வெளிப்படைத்தன்மையை கொண்டு வருகிறது. முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்ப ஹிந்துக் கோயிலுடன் இம்மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒப்பிடுகின்றன. இந்திரா கொலை செய்யப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் எப்படி கொல்லப்பட்டனர் என்பதை காங்கிரசின் வேணுகோபால் விளக்குவாரா? ஆனால் தற்போது அவர்கள் சிறுபான்மையினர் குறித்து பேசுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us