இடுக்கியில் ஐந்து இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை
இடுக்கியில் ஐந்து இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை
ADDED : மே 08, 2025 02:34 AM
மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் போர் கால பாதுகாப்பு ஒத்திகை ஐந்து இடங்களில் நடந்தது.
மூணாறு பொறியியல் கல்லூரி, மாமலகண்டம் அரசு உயர் நிலை பள்ளி, அடிமாலி மன்னான்கண்டம் அரசு உயர் நிலை பள்ளி, பீர்மேடு தாலுகாவில் குமுளி, மன்னாம்குடி சமூக ஆய்வு மையம், தொடுபுழாவில் தனியார் மேல்நிலை பள்ளி ஆகியவற்றில் ஒத்திகை நடந்தது. மாலை நான்கு மணிக்கு சைரன் ஒலி எழுப்பியதும் வீடு, அலுவலகம் உள்பட அனைத்து கட்டடங்களிலும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஜன்னல் கதவுகள் ஆகியவை மூடப்பட்டன. வெளிச்சம் தெரியாமல் இருக்க ஜன்னல்களில் திரைகள் மூடப்பட்டன.
தொடுபுழாவில் சேதமடைந்த கட்டத்தில் இருந்தும் இடுக்கி பொறியியல் கல்லுாரியில் தீப்பிடித்த நடவடிக்கை போன்றும் மீட்புப் பணிகள் ஒத்திகை நடந்தது. மாலை 4:30 மணிக்கு மீண்டும் சைரன் ஒலிக்கப்பட்டு ஒத்திகை முடிக்கப்பட்டது.
மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு, போலீஸ், வருவாய்த்துறை, சமூக அமைப்பு உள்பட பல்வேறு தரப்பினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். முன்னதாக இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி நேற்று காலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தீயணைப்பு, போலீஸ், வருவாய், மருத்துவம், ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு துறைகள் சார்பிலான வாகனங்கள் செல்லும் என்பதால் பொது மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தததால் மக்கள் அச்சமடையவில்லை.
