துவங்கியது இந்தியா- அமெரிக்க ராணுவ கூட்டு போர் ஒத்திகை
துவங்கியது இந்தியா- அமெரிக்க ராணுவ கூட்டு போர் ஒத்திகை
ADDED : செப் 09, 2024 07:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்ப்பூர்: இந்தியா -அமெரிக்கா இடையே மிகப்பெரிய அளவிலான ராணுவ கூட்டு போர் ஒத்திகை ராஜஸ்தானில் இன்று துவங்கியது.
இந்தியா -அமெரிக்கா இடையே ‛‛யுத் அபியாஸ்-2024'' என்ற பெயரில் 20-வது சீசன் ராணுவ கூட்டு போர் ஒத்திகை ராஜஸ்தானின் பிகானுரில் உள்ள மஹாஜன் ராணுவ முகாம் மைதானத்தில் துவங்கியது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஒத்திகையில் இரு நாடுகளிலும் தலா 600 வீரர்கள் என 1200 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவற்றில் ராஜஸ்தானின் ராஜ்புத் ரெஜிமெண்ட் படைப்பிரிவு வீரர்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரையில்லாத அளவில் இம்முறை மிக பெரிய அளவில் இந்த போர் ஒத்திகை இருக்கும் ராஜஸ்தான் ராணுவ படைப்பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் அமிதாப் சர்மா தெரிவித்தார்.