sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ வினாத்தாள் கசிவதாக பொய் தகவல் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை

வினாத்தாள் கசிவதாக பொய் தகவல் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை

வினாத்தாள் கசிவதாக பொய் தகவல் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை


ADDED : பிப் 18, 2025 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 02:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: மத்திய கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த, 8ல் துவங்கி, வரும் ஏப்ரல் 4 வரை நாடு முழுதும் நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வின் போது, வினாத்தாள்கள் லீக் ஆனதாக தகவல்கள் பரப்பப்பட்டு, தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் பீதி கிளப்பப்படுகிறது.

அதுபோல, நடப்பு ஆண்டின், சி.பி.எஸ்.இ., தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக, சில தகவல்கள், சமூக ஊடகங்களில் உலா வருகின்றன.

இது குறித்து சி.பி.எஸ்.இ., கல்வி வாரிய செயலர் ஹிமான்சு குப்தா கூறியதாவது:

சமூக ஊடகங்கள் வாயிலாக தான், வினாத்தாள்கள் கசிவடைந்ததாக போலி தகவல்கள் பரப்பப்படுகின்றன. அந்த ஊடகங்களை பயன்படுத்தி, பொய்யான தகவல்களை பரப்புவோரை கண்காணிக்கிறோம். தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் தேவையற்ற பீதியை கிளப்பும், இத்தகைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வினாத்தாள் லீக் ஆனதாக வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியாகும் தகவல்களையே அனைத்து தரப்பினரும் நம்ப வேண்டும்.

தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us