பாருங்கள் சூப்பர் வீடியோ: அயோத்தி கோயிலின் அற்புதக்காட்சி
பாருங்கள் சூப்பர் வீடியோ: அயோத்தி கோயிலின் அற்புதக்காட்சி
ADDED : ஜன 20, 2024 03:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தி : அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஜன.,22) நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இச்சூழ்நிலையில் கோவில் பளிங்கு கற்களாலும், மின்னொளியிலும் ஜொலிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
டிடி நியூஸ் தொலைக்காட்சி, ‛‛கலைஞர்களின் கைத்திறன் பிரமிக்க வைக்கிறது. இந்தியாவின் கலாசார பாரம்பரியத்திற்கு ஒரு சான்று'' எனக்கூறி இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளது. வீடியோவில், கோவில் படிக்கட்டுகள் மார்பிள் கற்களால் ஜொலிக்கிறது. கோவில் தூண்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உட்பிரகாரம் மின்னொளியில் மின்னுகிறது. பணியாளர்கள் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.