அச்சச்சோ... தாஜ் மஹாலுக்கு என்ன ஆச்சு... தொல்லியல் துறை அலர்ட்!
அச்சச்சோ... தாஜ் மஹாலுக்கு என்ன ஆச்சு... தொல்லியல் துறை அலர்ட்!
UPDATED : செப் 14, 2024 02:22 PM
ADDED : செப் 14, 2024 01:44 PM

புதுடில்லி: ஆக்ராவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டிய நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் முக்கிய குவிமாடத்தில் நீர் கசிவு ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏற்படாது என அதனை பராமரிக்கும் தொல்லியல் துறை கூறியுள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. உ.பி.,யின் ஆக்ராவிலும் கனமழை பெய்தது. இதனையடுத்து அங்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, தாஜ்மஹாலின் மேற்கூரையிலும் நீர்கசிவு ஏற்பட்டது. இதனை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து ஆக்ரா சரக தொல்லியல் துறை அதிகாரி ராஜ்குமார் படேல் கூறுகையில், தாஜ்மஹாலின் முக்கிய குவிமாடத்தில் நீர்கசிவு ஏற்பட்டதை கண்டுபிடித்தோம். டுரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தோம். அதில், குவிமாடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, தாஜ்மஹாலில் உள்ள தோட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.