பெங்களூரில் குடிநீர் பிரச்னை தமிழகம் மீது குற்றச்சாட்டு
பெங்களூரில் குடிநீர் பிரச்னை தமிழகம் மீது குற்றச்சாட்டு
ADDED : பிப் 27, 2024 08:13 AM

பெங்களூரு ; 'தமிழகத்தில் அரசியல் கூட்டணிக்கு, முக்கியத்துவம் கொடுத்ததால், பெங்களூரில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது,' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக, 'எக்ஸ்' தளத்தில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:
பெங்களூரின் குடிநீர் பிரச்னையை, காங்கிரஸ் அரசும், முதல்வர் சித்தராமையாவும் தீவிரமாக கருதவில்லை.
தமிழகத்தில் தன் அரசியல் கூட்டணிக்கு, முக்கியத்துவம் கொடுத்து, கர்நாடக மக்களை பிரச்னையில் தள்ளிவிட்டார். காவிரி மேலாண்மை ஆணையம் முன், மாநில நலன் குறித்து வாதிடுவதில், கர்நாடக காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது.
தமிழகத்தில் அரசியல் கூட்டணிக்கு, முக்கியத்துவம் கொடுத்ததால், பெங்களூரில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, முதல்வரையும், அரசையும் நான் வலியுறுத்துகிறேன்.
மழை காலத்துக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. நீர் குறைவாக உள்ளது. குடிநீர் பிரச்னை அதிகரிப்பதால், அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
