ADDED : மார் 13, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீச்சல் குளத்துக்கு தடை
குடிநீரை, வாகனங்களை சுத்தம் செய்வது போன்றவற்றுக்காக குடிநீரை வீணாக்கினால், 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரியம் கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது.
தற்போது, குடிநீரை நீச்சல் குளங்களுக்கு பயன்படுத்தினால், 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று நேற்றுஉத்தரவிட்டுள்ளது.
20 சதவீதம் குறைப்பு
மேலும், அதிக அளவில் காவிரி நீர் பயன்படுத்தும் 38 பேருக்கு, மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை 10 சதவீதமும்; ஏப்ரல் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 20 சதவீதமும் காவிரி நீர் குறைத்து வினியோகிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

