ADDED : செப் 19, 2024 07:58 PM
கரோல்பாக்:பராமரிப்புப் பணிகள் காரணமாக தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் இன்று 12 மணி நேரம் தண்ணீர் வினியோகம் இருக்காது என, டில்லி குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாரியம் வெளியிடப்பட்ட அறிக்கை:
டாக்டர் அம்பேத்கர் நேஷனல் மெமோரியல், சிவில் லைன் வளாகத்தில் உள்ள சந்திரவால் வாட்டர் ஒர்க்ஸில் இருந்து வெளியேறும் 500 மி.மீ., டயா ரைசிங் மெயின் கசிவு சரி செய்யும் பணி நடக்கிறது.
இதனால் இன்று காலை 11:00 மணி முதல் 12 மணி நேரம் சந்திரவால் நீர்நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும்.
சிவில் லைன்ஸ், இந்து ராவ் மருத்துவமனை, கமலா நகர், சக்தி நகர், கரோல் பாக், பஹர் கஞ்ச், பழைய மற்றும் புதிய ராஜேந்தர் நகர், கிழக்கு மற்றும் மேற்கு படேல் நகர், பல்ஜீத் நகர், பிரேம் நகர், இந்தர்புரி, கண்டோன்மென்ட் பகுதிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு டில்லியின் கீழ் உள்ள பகுதிகள்.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டிஜேபி ஹெல்ப் லைன் அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து தேவைக்கேற்ப தண்ணீர் டேங்கர்கள் கிடைக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.