வடக்கு மாவட்டத்தில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்
வடக்கு மாவட்டத்தில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்
ADDED : அக் 15, 2024 07:57 PM
புதுடில்லி:'பராமரிப்பு பணி காரணமாக வடக்கு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று காலை 10:00 மணி முதல் 18 மணி நேரத்துக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்,' என டில்லி ஜல் போர்டு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி ஜல்போர்டு வெளியிட்டுள்ள அறிக்கை:
பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், வடக்கு மாவட்டம் பாவானா மற்றும் அதைச் சுற்றியுள்ள காலனிகள், சுல்தான்பூர் தபாஸ் கிராமம், பூத் குர்த் கிராமம், பர்வாலா கிராமம், மஜ்ரா தாபாஸ் கிராமம், சந்த்பூர் கிராமம், வார்டு 35 கஞ்சவாலா மற்றும் வார்டு 36 ராணி கெரா மற்றும் அவற்றின் அருகிலுள்ள பகுதிகளில் இன்று காலை 10:00 மணிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். நாளை அதிகாலை 4:00 மணி முதல் வழக்கம்போல் குடிநீர் வினியோகம் தொடரும்.
எனவே, இந்தப் பகுதிகளில் வசிப்போர் தங்கள் தேவைக்கேற்ப போதுமான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
அதேநேரத்தில், அவசரத் தேவைக்கு ஜல் போர்டு உதவி எண் மற்றும் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தால், லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.