'நாங்களும் ஹிந்து தான்' அமைச்சர் பரமேஸ்வர் கருத்து
'நாங்களும் ஹிந்து தான்' அமைச்சர் பரமேஸ்வர் கருத்து
ADDED : ஜன 29, 2024 07:36 AM

துமகூரு: ''மாண்டியாவில் ஹனுமன் உருவம் பொறித்த, காவி கொடியை அகற்றிய விவகாரத்தில், நாங்களும் ஹிந்து தான்,'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கருத்து தெரிவித்து உள்ளார்.
துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாண்டியாவில் உள்ள கிராமத்தில், ஹனுமன் உருவம் பொறித்த, காவி கொடியை அகற்றிய விவகாரத்தில், பா.ஜ., - ம.ஜ.த.,வினர் அரசியல் செய்கின்றனர். தேசியக் கொடியை ஏற்ற, கிராம பஞ்சாயத்திடம் அனுமதி பெற்று விட்டு, ஹனுமன் உருவம் பொறித்த, கொடியை ஏற்றுவது சரியா.
அரசு வளாகத்தில் தேசியக் கொடி ஏற்ற மட்டுமே அனுமதி உள்ளது. கூட்டத்தை கலைக்க அங்கு, லேசான தடியடி நடத்தப்பட்டு உள்ளது. சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வேலை, மாண்டியாவில் நடந்து உள்ளது. காங்கிரஸ் கட்சி ஹிந்துகளுக்கு எதிரானது என்று, பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர். இது சுத்த பொய்.
நாங்களும் ஹிந்துக்கள் தான்; வேற்று கிரகத்தில் இருந்து, வந்தவர்கள் இல்லை. பா.ஜ.,வினர் சட்டத்தை மீறி, ஏதாவது செய்ய நினைக்கின்றனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்று கொள்வதாக கூறிய, முதல்வர் சித்தராமையாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அந்த அறிக்கையை தயார் செய்ய, அரசு 168 கோடி ரூபாய், செலவு செய்து உள்ளது. அந்த அறிக்கை குறித்த விவாதத்தை பின்னர் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.