தேர்தலா...? நாங்க எப்பவோ ரெடி..! தேதியை சொல்லுங்க...! காங்., 'கலகல'
தேர்தலா...? நாங்க எப்பவோ ரெடி..! தேதியை சொல்லுங்க...! காங்., 'கலகல'
UPDATED : ஆக 20, 2024 07:48 AM
ADDED : ஆக 20, 2024 07:29 AM

புதுடில்லி: அடுத்து வரக் கூடிய தேர்தல்களை எதிர்கொள்ள காங்கிரஸ் முழுவீச்சில் தயாராகிவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறி உள்ளார்.
தேர்தல் தேதிகள்
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அண்மையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டமாகவும், ஹரியானாவுக்கு அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாகவும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை
இந் நிலையில் புதுடில்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொதுச் செயலாளர்கள், மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கோபம்
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவரங்கள் குறித்து பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது; அடுத்து வரக்கூடிய தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் முழு வீச்சில் தயாராக உள்ளோம். மத்திய பா.ஜ. அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக மக்கள் கடும் கோபத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர்.
வெற்றி கிடைக்கும்
தேர்தலில் நிச்சயம் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். வெற்றி பெற்று ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம் என்று கூறி உள்ளார்.