ADDED : டிச 12, 2024 01:09 AM

லோக்சபாவில் ஆளுங்கட்சியான பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு சபையை ஒத்தி வைக்கின்றன. அவர்களுக்கு சபையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பிரச்னைகளை எழுப்ப வாய்ப்பு கிடைப்பதில்லை.
கல்யாண் பானர்ஜி
லோக்சபா எம்.பி., திரிணமுல் காங்.,
தனித்து போட்டி!
டில்லி சட்டசபை தேர்தலுக்காக, ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி தன் சொந்த பலத்தை நம்பி களம் இறங்குகிறது; காங்கிரசுடன் கூட்டணி இல்லை.
அரவிந்த் கெஜ்ரிவால்
ஒருங்கிணைப்பாளர்,ஆம் ஆத்மி
'இண்டி' கூட்டணிக்கு வாழ்த்து!
'இண்டி' கூட்டணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என என் மீது மரியாதை வைத்து கூறிய தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் நலன் விரும்பி நான். உங்களின் கட்சி சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன். இண்டி கூட்டணியும் நன்றாக செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

