பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒருவர் பலவீனத்தால் இழந்தோம்: மறைமுகமாக நேருவை சாடிய ஜெய்சங்கர்
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒருவர் பலவீனத்தால் இழந்தோம்: மறைமுகமாக நேருவை சாடிய ஜெய்சங்கர்
ADDED : மே 16, 2024 05:54 PM

மும்பை: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒருவரின் பலவீனத்தால் இழந்தோம் என முன்னாள் பிரதமர் நேருவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக சாடியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜெய்சங்கர் பேசியதாவது: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன். யாரோ ஒருவரின் பலவீனம் அல்லது தவறு காரணமாக, அது தற்காலிகமாக நம்மிடம் இருந்து பறிபோய் விட்டது. சீனா பாகிஸ்தானுடன் கைகோர்த்து செயல்படுவதை நாம் அனைவரும் அறிவோம்.
சீனாவை நெருக்கமாக வைத்திருக்க, பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த சுமார் 5,000 கிமீ பகுதியை அந்நாட்டிடம் ஒப்படைத்தது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க, நம்முடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது?. பா.ஜ.,வின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.