ADDED : செப் 06, 2025 12:28 AM

தற்போது பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுக்கு முக்கியத்து வம் தரப்படுகிறது. ஆனால், பள்ளிகளுக்கு மிக முக்கிய தேவை, 'ஸ்மார்ட்' ஆசிரியர்களே. இத்தகைய புத்திசாலித்தனமான ஆசிரியர்கள் தான் மாணவர்களின் தேவையை அறிந்து படிப்பை சுவாரஸ்யமாக மாற்றுவர்.
திரவுபதி முர்மு ஜனாதிபதி
ராகுல் கண்டிக்காதது ஏன்?
கேரள காங்கிரஸ் பீடியையும் பீஹாரையு ம் ஒப்பிட்டு தன் சமூக வலைதளத்தில் கிண்டல் செய்துள்ளது. காங்கிரஸ் எப் போது தான் இது போன்ற இழிவா ன அரசியலை கைவிடும்? இதுபோன்ற தரமற்ற விமர்சனங்களை இதுவரை காங்கிரசின் ராகுலோ, சோனியாவோ ஏன் கண்டிக்கவில்லை?
ரவிசங்கர் பிரசாத் லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
அரசு கண்காணிக்கும்!
ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு சென்றடைவதை மத்திய அரசு கண்காணிக்கும். வரி குறைப்பு அந்தந்த பொருட்களின் விலைகளில் முழுமையாக பிரதிபலிக்கும் என்று நிறுவனங்கள் என்னிடம் உறுதி அளித்துள்ளன. இது செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும்.
பியுஷ் கோயல் மத்திய அமைச்சர், பா.ஜ.,