கடமையை நிறைவேற்றாதவரை அதிகாரத்தை கேட்க முடியாது; ராகுல் பேச்சு
கடமையை நிறைவேற்றாதவரை அதிகாரத்தை கேட்க முடியாது; ராகுல் பேச்சு
UPDATED : மார் 08, 2025 05:18 PM
ADDED : மார் 08, 2025 05:02 PM

ஆமதாபாத்: '' நமது கடமையை நிறைவேற்றாத வரை அதிகாரத்தை தாருங்கள் என நாம் மக்களிடம் கேட்க முடியாது, '' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது . நான் இங்கு வரும்போது எல்லாம் 2007, 2012, 2017, 2022ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து ஆலோசனை நடப்பதை பார்க்கிறேன். ஆனால் எனது கேள்வி தேர்தல் முடிவு பற்றி அல்ல.
உறுதி
நமது கடமையை நிறைவேற்றாத வரை குஜராத் மக்கள் நம்மை வெற்றி பெறச் செய்ய மாட்டார்கள். நமது கடமையை நிறைவேற்றாமல் அதிகாரத்தை கொடுக்க வேண்டுமென மக்களிடம் நாம் கேட்க முடியாது. இதனைச் செய்யும் நாளன்று குஜராத் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதற்கு உறுதியளிக்கிறேன்.
நம்ப மாட்டார்கள்
குஜராத்தை சேர்ந்தவர்
ஆங்கிலேயர்களை எதிர்க்க காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேவைப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் ஏராளமானோர் இருந்தாலும் தலைவர் என யாரும் இல்லை. ஆனால் அந்த தலைவர் தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்தார். அந்த தலைவர் மகாத்மா காந்தி. அவரை நமக்கு கொடுத்தது யார்? தென் ஆப்ரிக்கா கொடுக்கவில்லை. அவரை குஜராத் மாநிலம் தான் காங்கிரஸ் கட்சிக்கு அளித்தது.மஹாத்மா காந்தி தான் நமக்கு, சிந்திக்கும் திறனையும், போராட்டத்திற்கான வலிமையையும் கொடுத்தார்.
மஹாத்மா காந்தி இல்லாமல் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் கட்சி போராட இருக்க முடியாது. குஜராத் இல்லாமல் காந்தி நமக்கு கிடைக்க மாட்டார். காங்கிரசில் உள்ள ஐந்து பெரிய தலைவர்கள் இரண்டு பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்.
காந்தி, படேல் கற்றுத்தந்த சித்தாந்தத்திற்கு காங்., திரும்ப வேண்டும் காங்கிரசுக்கு அடிப்படை தலைமையைக் கொடுத்தது குஜராத். குஜராத்தில் இப்போது தொழில், வணிகம், வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்சியினர் மக்களிடம் சென்று குறைகளைக் கேட்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.