sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூருவில் எச்125 ஹெலிகாப்டர் ஆலை: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் திறந்து வைத்தனர்

/

பெங்களூருவில் எச்125 ஹெலிகாப்டர் ஆலை: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் திறந்து வைத்தனர்

பெங்களூருவில் எச்125 ஹெலிகாப்டர் ஆலை: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் திறந்து வைத்தனர்

பெங்களூருவில் எச்125 ஹெலிகாப்டர் ஆலை: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் திறந்து வைத்தனர்

2


UPDATED : பிப் 18, 2026 06:07 AM

ADDED : பிப் 17, 2026 06:35 PM

Google News

2

UPDATED : பிப் 18, 2026 06:07 AM ADDED : பிப் 17, 2026 06:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: கர்நாடக மாநிலம் வேமகலில் அமைக்கப்பட்ட எச்125 இலகு ரக ஹெலிகாப்டர் ஆலையை பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் மோடி இணைந்து திறந்து வைத்தனர்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வந்தார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடியை , சந்தித்த மேக்ரான், ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்துஇருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: மேக்ரானை வரவேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு, பிரான்சில் நடந்த ஏஐ மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு விடுத்தார். அப்போது , ஐரோப்பாவுக்கும், பிரான்சுக்கும் நுழைவு வாயிலாக திகழும் பிரான்சின் மிகப்பெரிய துறைமுக நகருக்கு சென்றேன். முதலாவதுஉலகப்போரின்போது இந்திய வீரர்கள் கால்தடம் பதித்தஇடம் மார்ஷிலி என்ற நகரம். அவர்களின் வீரம் இன்றும் ஐரோப்பாவில் போற்றப்படுகிறது. அந்த நகரில்தான் ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பிக்க சாவர்க்கர் கடலில் குதித்தார். இந்தாண்டு இந்தியாவில் நடக்கும் ஏஐ மாநாட்டில் பங்கேற்க மேக்ரானை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரான்சில் கலாசார மையம்


நமது உறவை, மக்களுக்கு இடையிலான உறவாக மாற்றுகிறோம். புதுமையான கண்டுபிடிப்பு என்பதை தனித்து நடக்காது . அது ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியம். பாதுகாப்பு, சுத்தமான எரிசக்தி, விண்வெளி அல்லது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் நமது தொழிற்துறை மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் ஒன்றாக இணைக்கப்படுவார்கள். ஸ்டார்ட் அப் மற்றும் எம்எஸ்எம்இ இடையே வலுவான பிணைப்பு ஏற்படுத்தப்படும். மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிமாறி கொள்ளப்படுவதுடன் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு மையம் அமைக்கப்படும்.

இந்தியாவும் பிரான்சும் பழமைவாய்ந்த நாகரிக நாடுகள். கலாசாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வுருகிறோம். பிரான்சில் விரைவில் சுவாமி விவேகானந்தர் கலாசார மையத்தை அமைக்க உள்ளோம். எவரெஸ்ட் சிகரம் உயரம் வரை பறக்கும் ஹெலிகாப்டர்கள், பிரான்சுடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக ஒப்பந்தம்


பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியதாவது: இந்தியா பிரான்ஸ் இடையிலான உறவு உண்மையில் மறக்க முடியாதது, தனித்துவமானது. நம்பிக்கை மற்றும் நல்ல நோக்கங்களுடன் நமது உறவு உள்ளது. இந்த உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். உறவில் நம்பிக்கை வைத்துள்ளோம். சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை வைத்துள்ளோம்.

ரபேல் முதல், நீர்மூழ்கி கப்பல்கள் வரை நமது பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது. இந்தியா - ஐரோப்பா இடையிலானஉறவில் 2026ம் ஆண்டு மிகவும் முக்கியமானதாக உள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம கையெழுத்தாகி உள்ளது.

பிரான்சின் மிகவும் நம்பிக்கைக்கூரிய கூட்டாளியாக இந்தியா உள்ளது. உலகத்தின் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா -பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

திறப்பு

இதனிடையே, கர்நாடகாவில் டாடா ஏர்பஸ் நிறுவனத்தின் எச்125 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் ஆலையை இருவரும் திறந்து வைத்தனர். மேக் இன் இந்தியா திட்டத்தில் தனியார் சார்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் தயாரிக்கும் ஆலை இதுவாகும்.

ஒரே காரில் பயணம்


இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபரும் ஒரே காரில் பயணம் செய்தனர். இந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us