sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை போக்குவோம்: மோடி

/

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை போக்குவோம்: மோடி

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை போக்குவோம்: மோடி

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை போக்குவோம்: மோடி

4


ADDED : ஜன 24, 2025 11:32 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:32 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: “பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை போக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி, தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2008 முதல் மத்திய அரசு சார்பில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தைகளின் தினத்தையொட்டி பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

நம் நாட்டில் அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகள் சாதனை புரிவதன் வாயிலாக, இந்தியா பெருமை கொள்கிறது. பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிக்கவும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உருவாக்கி தருவதிலும், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

அவர்களின் சாதனைகள், நம் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளன.

கல்வி, தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக, பெண் குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்த, மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை போக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us