10 ஆண்டுகளுக்குள் வறுமையை முற்றிலும் ஒழிப்போம்: ராஜ்நாத் சிங் உத்தரவாதம்
10 ஆண்டுகளுக்குள் வறுமையை முற்றிலும் ஒழிப்போம்: ராஜ்நாத் சிங் உத்தரவாதம்
ADDED : ஏப் 28, 2024 01:17 PM

புதுடில்லி: இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நாங்கள் வறுமையை முற்றிலும் ஒழிப்போம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இது குறித்து ராஜ்நாத் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சூரத்தில் இருந்து எங்களது வெற்றி கணக்கு துவங்கினோம். 28 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. தோல்வியை கண்டு காங்கிரஸ் இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. அவர்கள் எமர்ஜென்சியை கொண்டு வந்தனர். அடிப்படை உரிமைகளை ரத்து செய்தனர். அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் எதிர்க்கிறார்கள். அவர்கள் அதை நீதிமன்றத்தில் சவால் செய்யலாம்.
2027க்குள் 3வது இடம்!
2014 வரை, பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது 5வது இடத்தில் உள்ளது. 2027க்குள் இந்தியா முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக வருவதை யாராலும் தடுக்க முடியாது. பிரதமர் மோடி நம்பகமான தலைவர் ஆக இருக்கிறார். அவருக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. இண்டியா கூட்டணிக்கு ஒரு தலைவர், கொள்கை எதும் கிடையாது. இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நாங்கள் வறுமையை முற்றிலும் ஒழிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

