ADDED : பிப் 08, 2026 07:45 AM

சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான வழக்கில் கைதான நபர்கள், ஜாமின் பெற வழிவகுக்கும் வகையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாடகமாடுகின்றன; இந்த விவகாரத்தில், பா.ஜ., முழுமையாக போராடி, நீதியைப் பெற்று தரும். கேரளாவை வளர்ந்த மாநிலமாக மாற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நிதின் நபின் தேசிய தலைவர், பா.ஜ.,
வாழ்வாதாரத்தை அழிக்கும்!
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பதப்படுத்தப்பட்ட பழங்களுக்காக உள்நாட்டுச் சந்தைகளை திறப்பது இந்தியர்களின் வாழ்வாதாரங்களை அழித்துவிடும். பால் பொருட்கள், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட் கள் பூஜ்ய வரிச்சலுகைகளில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்
ஹிந்துக்களை மிஞ்சாது!
நம் நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர், 40 வயதுக்குஉட்பட்டவர்களாக உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு பின், அவர்களுக்கு வயதாகிவிடும். அது எப்படி நம்மை பாதிக்கும் என்பதைப் பற்றி நாம் சிந்திப்பது இல்லை. நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒரு போதும் ஹிந்துக்களின் மக்கள் தொகையை மிஞ்சாது.
அசாதுதீன் ஓவைசி தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,

