மாநிலத்தை பிரிக்க விடமாட்டோம்: மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
மாநிலத்தை பிரிக்க விடமாட்டோம்: மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : ஆக 05, 2024 08:11 PM

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் இரண்டாக பிரிப்புக்கு எதிராக இன்று (ஆக.,5) சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் சில வட மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பிரதமர் மோடியை சமீபத்தில் சந்தித்து வலியுறுத்தினார். இந்த சந்திப்புக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கடும் கண்டனம் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 30ம் தேதி சட்டசபையில் பேசிய முதல்வர் மம்தா மேற்குவங்க மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை என்ன விலை கொடுத்தாவது தடுப்பேன் என்றார்.
டார்ஜிலிங்கை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தின் வட மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இன்று மேற்குவங்க சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில், மாநிலத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு தீர்மானம் நிறைவேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து முதல்வர் மம்தா பேசியது, இந்திய சுதந்திரத்திற்காக போராடியது மேற்கு வங்கம். நம் மாநிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம் இது. மாநில வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.