மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிரான தடைகளை அகற்றுவோம்; பிரதமர் மோடி உறுதி
மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிரான தடைகளை அகற்றுவோம்; பிரதமர் மோடி உறுதி
ADDED : நவ 28, 2026 01:38 PM

புதுடில்லி: தொகுதி மறுவரையறை மசோதாவுடன், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, 30ம் தேதி பார்லியில் தாக்கப்பட உள்ள நிலையில், நாட்டில் உள்ள பெண்களுக்கு பிரதமர் மோடி உறுதி ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில்; பெண்கள் சக்திக்கு உரிய பங்களிப்பைப் பெறுவதற்கான போராட்டம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக முயற்சிப்பவர்களில் பல ஆண்டுகளாக நானும் ஒருவனாக இருந்து வருகிறேன். ஏராளமான பெண்கள் என்னிடம் இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். பல சகோதரிகள் கடிதங்கள் மூலமாகத் தங்கள் உணர்வுகளை என்னிடம் வெளிப்படுத்தினர்.
நாட்டின் 100 சதவீத பெண்கள் சக்தியின் ஆசீர்வாதமும் எங்களுக்கு உள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டிற்குத் தடையாக வரும் ஒவ்வொரு முட்டுக்கட்டையையும் நாங்கள் அகற்றுவோம் என்று நாட்டின் ஒவ்வொரு பெண்ணிற்கும் நான் உறுதியளிக்கிறேன். எங்கள் மன உறுதி உயர்ந்துள்ளது, எங்கள் துணிச்சல் உடைக்க முடியாதது.
மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகளால், பார்லி, மாநில சட்டசபைகளில் பெண் சக்தியின் பங்களிப்பு அதிகரிப்பதை ஒருபோதும் தடுக்க முடியாது. இது விரைவில் நிறைவேறும். இவ்வாறு கூறினார்.
