பாஜ செயல் தலைவராக பொறுப்பேற்று கொண்டார் நிதின் நபின்
பாஜ செயல் தலைவராக பொறுப்பேற்று கொண்டார் நிதின் நபின்
UPDATED : டிச 15, 2025 04:31 PM
ADDED : டிச 15, 2025 03:56 PM

புதுடில்லி: பாஜவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நேற்று நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று டில்லி வந்த அவர், பாஜ தலைமை அலுவலகம் வந்தார். அங்கு அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாத்யாயா சிலைக்கு நிதின் நபின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பாஜவின் செயல் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். நிதின் நபினுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜேபி நட்டா மற்றும் பாஜ நிர்வாகிகள் ஆகியோர் மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

