தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வலை வளை: அக். 9

வலை வளை: அக். 9

வலை வளை: அக். 9


UPDATED : அக் 08, 2026 08:43 PM

ADDED : அக் 08, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 08:43 PM ADDED : அக் 08, 2026 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேஷன் பாதி; விவசாயம் பாதி

ஜார்க்கண்ட் வாலிபர் கலக்கல்

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விவசாயி நிஷாந்த் கெர்கெட்டா, 24, வயலில் தோட்ட வேலை செய்வது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுபவர். வெறும் கால்களுடன் வயல் வேலை செய்வதை வீடியோவின் முதல் பகுதியிலும், ஸ்டைலிஷ் ஆன ஆடைகளுடன் போஸ் கொடுப்பதை, வீடியோவின் இரண்டாம் பகுதியிலும் வெளியிட்டு கலக்குகிறார் நிஷாந்த்.

இப்படி அவர் வெளியிட்ட ரீல்ஸ்களில் ஒன்று, ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து விட்டிருக்கிறது. அவரது வீடியோக்களை பார்த்து பேஷன் உலக பிரபலங்கள் கூட அசந்து பாராட்டியுள்ளனர். வலைதளங்களிலும், அவருக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

பாஸ்வேர்டு கேட்ட திருடன்

ஐபோன் பறிகொடுத்தவர் அதிர்ச்சி

டேராடூனை சேர்ந்த இளம்பெண் கவுஷிகி தயானி. இவரது ஐபோன் சில வாரம் முன் திருடு போய் விட்டது. உடனடியாக, ஐபோனை யாரும் பயன்படுத்த முடியாத வகையில், ரகசிய பாஸ்வேர்டு பயன்படுத்தி, ‘லாக்’ செய்து விட்டார் கவுஷிகி. இந்நிலையில், அவர் வைத்திருக்கும் வேறு போனுக்கு மெசேஜ் வந்தது. திருடிச் சென்றவன் அனுப்பிய மெசேஜ் அது. ‘ஐபோன் பாஸ்வேர்டு வேண்டும்’ என்று கேட்கிறான் திருடன். ‘வெறும் போனை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது’ என்பது அவன் பிரச்னை.

மீண்டும் மீண்டும் மெசேஜ் வரவே நொந்து போன கவுஷிகி, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மீண்டும் புகார் அளித்தார். ‘திருடர்களுக்கு பயமே இல்லாமல் போய் விட்டது. உத்தரகாண்ட் போலீசாரால் தங்களை பிடிக்க முடியாது என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்’ என்று வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார் கவுஷிகி.

டிரம்ப் நிர்வாண சிலை

உலக அளவில் டிரெண்டிங்

பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க்கில், ஐரோப்பிய பார்லிமென்ட் அருகே, அமெரிக்க அதிபர் டிரம்பின் தங்க முலாம் பூசிய சிலை திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவு, சுற்றுச்சூழல், காலநிலை கொள்கைகளை விமர்சிக்கும் நோக்கில், சிற்பி ஜென்ஸ் கால்ஷியோட் என்பவர் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளார். ‘தி ஆரஞ்சு பிளேக்’ என்று சிலைக்கு பெயர் சூட்டியுள்ளனர். இந்த, 8 அடி நீளச் சிற்பம், ஒரு கையில் கோல்ப் மட்டையையும், மறு கையில் நீதியின் தராசையும் ஏந்தியிருக்கும் டிரம்பை நிர்வாணமாக சித்தரிக்கிறது.

அவரை விட மிகவும் சிறிய, சோர்வடைந்த ஒரு மனிதர் டிரம்ப் உருவ சிலையை சுமந்து செல்வது போன்றும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பகுதியில், ‘அநீதியின் அரசன்’ என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இப்படி ஒரு சிலை பிரான்சில் திறக்கப்பட்டது சர்வதேச அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

சமையலருக்கு ரூ.8 ஆயிரம்

செலவிட்டாலும் தவறில்லை

பெங்களூரை சேர்ந்த பெண் மேகா, ‘சமையல் வேலை செய்பவருக்கு மாதம், 8,000 ரூபாய் சம்பளம் தருகிறேன். அது ஒன்றும் மோசமில்லை’ என்று கூறும் பதிவு வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ‘எங்கள் 2 பேருக்காக அவர் தினமும் 2 முறை வந்து சமையல் செய்கிறார். சுவை சுமாராகவே இருக்கும். இருந்தாலும் நாங்கள் மாதம் 8,000 ரூபாய் செலவழிக்கிறோம். அது சிறப்பான உணவுக்காக அல்ல; தினமும் 2 முறை சமையல் செய்வதை பற்றி யோசிக்க தேவையற்ற நிலை இருப்பததற்காக; அத்துடன் என் நேரமும் மிச்சப்படுகிறது’ என்று கூறியுள்ளார். அவரது பதிவில், தங்கள் கருத்துக்களை கொட்டி வருகின்றனர் வலைதளவாசிகள்.

இரவு நேர ரயில் பயணத்தில்

இம்சை செய்வோர் பல விதம்

சத்பாவனா எக்ஸ்பிரஸ், ‘ஏசி கோச்சில்’ லக்னோவில் இருந்து ஆனந்த் விஹாருக்கு இரவு நேர பயணம் மேற்கொண்ட பூஜா என்பவர், ஒரு குடும்பத்தினர் சத்தமாக பேசிக்கொண்டு வந்தது பற்றி புகார் தெரிவித்துள்ளார். இரவு 1 மணியை கடந்தும், அவர்களது பேச்சு சத்தம் குறைந்தபாடில்லை. பொறுமை இழந்த பூஜா, ‘கொஞ்சம் சத்தத்தை குறைத்துக் கொள்ள முடியுமா, என்னால் துாங்க முடியவில்லை’ என்று அவர்களிடம் கூறினார்.

அதற்கு அந்த குடும்பத்தினர், ‘நாங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக பயணம் செய்கிறோம். பேசத்தான் செய்வோம்’ என்று கூறி விட்டனர். அத்துடன் நிற்கவில்லை. ‘நாங்கள் உன்னைப் போல் தனியாக வரவில்லை. குடும்பமாக வந்திருக்கிறோம்’ என்று கூறியும் கடுப்பேற்றினர். இதைக்கண்ட வலைதளவாசிகள், ரயில்வே அதிகாரிகளிடம் புகார் செய்ய ஆலோசனை கூறி வருகின்றனர்.

இதற்கு பெயர் சாதனையா?

போட்டி தேர்வுகள், விளையாட்டு போட்டிகளில் இளைஞர்கள் சாதனை படைத்து பெயர் வாங்குவதை பார்த்தவர்களுக்கு இந்த சாதனை சற்று ஆச்சர்யமாகத்தான் இருக்கும். ஆம், பீஹாரை சேர்ந்த சுபம் குமார், மொபைல் போனில் விளையாடக்கூடிய, ‘கேண்டி கிரஷ்’ சாகா போட்டியில், 22,222 என்ற லெவலை அடைந்துள்ளார். இது, பொழுது போக்குவதற்கான புதிர் விளையாட்டுப் போட்டி. இதில், இளம் வயதில் அதிக லெவல்களை கடந்தவர் என்ற வகையில், அவரது சாதனையை சர்வதேச சாதனையாளர் புத்தகம் அங்கீகரித்துள்ளது. தன் சாதனையை அவர் அறிவித்த வலைதள பக்கத்தில் ஏராளமானோர், கேலி, கிண்டல் நிறைந்த கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us