களை கட்டும் விற்பனை: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் அதிரடி சலுகை
களை கட்டும் விற்பனை: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் அதிரடி சலுகை
UPDATED : நவ 28, 2024 10:23 PM
ADDED : நவ 28, 2024 10:18 PM

புதுடில்லி: அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் 'பிளாக் பிரைடே' என்ற பெயரில் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளன.
தற்போதுள்ள உலகம் கிட்டத்தட்ட ஆன்லைன் உலகமாகிவிட்டது. எதை வாங்க வேண்டும் என்றாலும் ஒரு மொபைல் போன் போதும். அதில் உள்ளே புகுந்து எந்த பொருள், எந்த விலையில் எங்கு விற்பனையாகிறது என்பதை தெரிந்து கொண்டு அடுத்த நொடியே அதை ஆர்டர் செய்து 24 மணிநேரத்துக்குள் அதை தனதாக்கிக் கொள்ள முடியும்.
இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது மூத்த குடிமக்களும் ஆன்லைன் விற்பனையை அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளனர். வாடிக்கையாளர்களின் இந்த அதிகபட்ச ஆர்வத்தை குறிவைத்து முன்னணி ஆன்லைன் வர்த்தக தளங்கள் உச்சபட்ச தள்ளுபடி, மெகா சலுகைகளுடன் பொருட்கள் விற்பனையை தொடங்குவது வழக்கம்.
அந்த வகையில் முன்னணி இ காமர்ஸ் தளமான ரிலையன்ஸ் டிஜிட்டல், பிளிப்கார்ட், அமேசான், டாடா கிளிக் உள்ளிட்ட நிறுவனங்கள் ' பிளாக் பிரைடே' என்ற பெயரில் விற்பனையை துவங்குகின்றன. இதில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ரிலையன்ஸ் டிஜிட்டல்ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் டிச., 2 வரை 'பிளாக் பிரைடே' விற்பனையை நடத்துகிறது. 'மைஜியோ', 'reliancedigital.in' மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்து உள்ளது. குறிப்பிட்ட வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ.10 ஆயிரம் வரை சலுகை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறப்பட்டு உள்ளது.70,900 ரூபாய்க்கு ஐபோன் 16, ரூ.1,371 மாதத் தவணையில் ஐபேட்கள், ரூ.25 ஆயிரம் சலுகையில் ரெப்ரிஜரேட்டர்கள், பிலிப்ஸ் ரூ.1,999க்கு ஏர் பிரையர் , ரூ46,990க்கு லேப்டாப்கள், ரூ.26 ஆயிரம் சலுகையுடன் ஓஎல்இடி ஸ்மார்ட் டிவிக்களும் விற்பனைக்கு உள்ளது.
அமேசான்இந்த நிறுவனத்தின் 'பிளாக் பிரைடே' விற்பனை நாளை துவங்கி டிச., 2 வரை நடக்கிறது . குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் சலுகை கிடைக்கும்.அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதலாக 5 சதவீத சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளிப்கார்ட்'பிளிப் கார்ட்' நிறுவனம் நாளை வரை 'பிளாக் பிரைடே' விற்பனையை நடத்துகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், மின்னணு சாதன பொருட்கள், ஐபோன்கள் உள்ளிட்டவை சலுகை விலையில் கிடைக்கும். ஸ்மார்ட் வாட்ச், இயர்பட்கள், பவர் பேங்குகள் 80 சதவீத சலுகையுடனம், டிவி உள்ளிட்டவை 75 சதவீத சலுகையில் பெற்றுக் கொள்ளலாம்
குரோமாடாடா நிறுவனத்தின் குரோமா என்ற ஆன்லைன் வர்த்தக தளமானது, நவ.,27 முதல் டிச., 1 வரை 'பிளாக் பிரைடே' விற்பனையை நடத்துகிறது. இதுவும் குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகளுக்கு சலுகை அறிவித்து உள்ளது.மேக் புக்குகள், ஆப்பிள் வாட்சுகள், ஸ்மார்ட் டிவிக்களை சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.
டாடா கிளிக்இந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனவம் நவ.,23 முதல் டிச., 2 வரை சலுகை விலையில் கேட்ஜெட்கள், ஆடைகள், காலணிகள் உள்ளிட்டவை விற்பனையாகி வருகிறது. இதிலும் பல்வேறு வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 முதல் 15 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.