மே.வங்கத்தில் ரேஷன் ஊழல் வழக்கு: நகராட்சி முன்னாள் சேர்மன் கைது
மே.வங்கத்தில் ரேஷன் ஊழல் வழக்கு: நகராட்சி முன்னாள் சேர்மன் கைது
UPDATED : ஜன 06, 2024 03:43 PM
ADDED : ஜன 06, 2024 10:37 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக ஊழல் வழக்கு தொடர்பாக, பொங்கோன் நகராட்சி முன்னாள் சேர்மன் சங்கர் ஆதியாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் ரேஷன் வினியோகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜஹான் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் சென்றனர். அப்போது,அவர்களையும், பாதுகாப்பு படையினரையும் கட்சி தொண்டர்கள் கடுமையாக தாக்கினர். அதில் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ரேஷன் ஊழல் சம்பவம் தொடர்பாக பொங்கோன் நகராட்சி முன்னாள் சேர்மன் சங்கர் ஆதியா என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
லுக் அவுட் நோட்டீஸ்
இதனிடையே, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஷேக் ஷாஜகானுக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.