
ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை நிலைநிறுத்த நீதித் துறை உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சி, நீதித் துறை மட்டுமின்றி, ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் நம் தேசத்திற்கே பெரும் அவமானம். இது, நாட்டுக்கு ஓர் எச்சரிக்கை மணி.
சரத் பவார் தலைவர், தேசியவாத காங்., சரத் சந்திர பவார்
மன்னிக்க முடியாத ஊழல்!
சபரிமலை அய்யப்பன் கோவிலில், துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசத்தின் எடை குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கேரளாவை ஆளும் மார்க்.கம்யூ., அரசு, மன்னிக்க முடியாத ஊழலை செய்துள்ளது. இந்த முறைகேடு பல்வேறு கோவில்களில் நடந்துள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.
ராஜிவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்
காங்., கூட்டணி வெல்லும்
!
நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தும் நடுவராக இருக்க வேண்டிய தேர்தல் கமிஷன், சமரசம் செய்யப்பட்டு பா.ஜ.,வின் ஓர் அமைப்பை போல செயல்பட்டு வருகிறது. பீஹாரில் நியாயமாக தேர்தல் நடந்தால், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி நிச்சயம் வெல்லும் என்பது அனைவருக்கும் தெரியும்.
மாணிக்கம் தாகூர் லோக்சபா எம்.பி., - காங்.,