sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தத்தால் என்ன லாபம்!

/

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தத்தால் என்ன லாபம்!

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தத்தால் என்ன லாபம்!

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தத்தால் என்ன லாபம்!

5


UPDATED : ஜன 27, 2026 05:05 PM

ADDED : ஜன 27, 2026 04:51 PM

Google News

UPDATED : ஜன 27, 2026 05:05 PM ADDED : ஜன 27, 2026 04:51 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் கிடைக்கும் பலன்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கும், 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மகத்தான ஒப்பந்தம் என்று குறிப்பிடும் வகையில், 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம், இரு தரப்புக்கும் பல்வேறு நலன்களை அளிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1.ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெஷினரி, எலக்ட்ரிக்கல் பொருட்கள், ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி ரத்து செய்யப்படுகிறது.

2.ஐரோப்பிய நாடுளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90 சதவீதம் பொருட்களின் மீதான வரி விதிப்பு ரத்து செய்யப்படுகிறது.

3.அடுத்த ஏழாண்டுகளில், 93 சதவீதம் பொருட்களின் மீதான வரி விதிப்பு, பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டி விடும்.

4.இரு தரப்புக்கும் இடையிலான 99.5 சதவீத வர்த்தகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் பலன் கிடைக்கும்.

5.இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் மற்றும் வேளாண் பொருட்கள் மீதான வரி விதிப்பு முற்றிலுமாக நீக்கப்படவில்லை.

6.இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரி விதிப்பு பூஜ்ஜியம் ஆக்கப்பட்ட துறைகள் வருமாறு: கடல் சார் பொருட்கள் (தற்போதைய வரி 26 சதவீதம்), ரசாயனங்கள் (தற்போதைய வரி 12.8 சதவீதம்), பிளாஸ்டிக்ஸ், ரப்பர் (தற்போதைய வரி 6.5 சதவீதம்), தோல், காலணிகள் (தற்போதைய வரி 17 சதவீதம்), ஜவுளி (தற்போதைய வரி 12 சதவீதம்), ஆயத்த ஆடை (தற்போதைய வரி 4 சதவீதம்), பேஸ் மெட்டல் (தற்போதைய வரி 10 சதவீதம்), ஆபரணங்கள் (தற்போதைய வரி 4 சதவீதம்)

7.இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய நாடுகளின் சராசரி வரி விதிப்பு விகிதம், 3.8 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைந்துள்ளது.

8.ஐரோப்பிய ஒயின், பீர், ஆலிவ் ஆயில், பதப்படுத்தப்பட்ட உணவு, சில பழங்கள் மீதான வரி, இந்தியாவில் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

9.பிரீமியம் ஒயின் மீதான இந்திய வரி விதிப்பு, 150 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக படிப்படியாக குறைக்கப்படும்.

10.ஐரோப்பிய தயாரிப்பு கார்கள், விலை 17 ஆயிரத்து 800 டாலர்களுக்கு குறைவு என்றால், இந்த ஒப்பந்த விதிமுறைகள் பொருந்தாது.

11.அதற்கு மேல் விலை கொண்ட கார்கள் என்றால், மூன்று பிரிவாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் கோட்டா மற்றும் தனித்தனி வரி விதிப்பு இருக்கும். பெரும்பாலான கார்களுக்கு 30 முதல் 35 சதவீதம் வரி விதிப்பு இருக்கும். அதாவது, பிஎம்டபிள்யூ., போக்ஸ்வேகன், மெர்சிடிஸ், ரெனால்ட் ஆகிய ஐரோப்பிய இறக்குமதி கார்களின் மீதான வரி கணிசமாக குறையும்.






      Dinamalar
      Follow us