sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேசியது என்ன? தினகரன் பேட்டி

/

டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேசியது என்ன? தினகரன் பேட்டி

டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேசியது என்ன? தினகரன் பேட்டி

டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேசியது என்ன? தினகரன் பேட்டி

9


ADDED : மார் 21, 2026 02:44 PM

Google News

9

ADDED : மார் 21, 2026 02:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது டில்லி நிருபர்

''தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை; ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்வது குறித்தே பேசினேன்'' என அமமும பொதுச்செயலாளர் தினகரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

டில்லியில் உள்ள இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்தார். பிறகு நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பியூஷ் கோயலை சந்தித்தோம். திமுகவை வீழ்த்த எங்களது கூட்டணி 234 தொகுதிகளில் செயல்பட வேண்டும் என்பது பற்றி அவருடைய கருத்துக்களை கேட்டுவிட்டு வந்தோம். நாங்கள் டில்லி வந்ததில் தவறு இல்லை. அமித் ஷா ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு வர முடியுமா?

தொகுதிப் பங்கீடு குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை. பீஹாரில் பாஜ எப்படி வென்றதோ, அதேபோல் தமிழகத்தில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசித்தோம். ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப்பது தொடர்பாக அமித்ஷாவுடன் ஆலோசனை மேற்கொண்டோம். நாங்கள் டில்லிக்கு வந்தாலே முதல்வர் பயப்படுகிறார். பயத்தில் திமுகவுக்கும், டில்லிக்கும் இடையே போட்டி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.

தேஜ கூட்டணியில் தேசிய அளவில் பாஜ, தமிழகத்துக்கு அதிமுக தான் தலைமை வகிக்கிறது. 12 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.12 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என ஏற்கனவே சொல்லிவிட்டேன். எங்கள் கூட்டணி முழுமையடைந்துவிட்டது, சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டுவரும் எண்ணமில்லை. எங்கள் கூட்டணி முழுமை பெற்றுவிட்டது. இவ்வாறு தினகரன் கூறினார்.






      Dinamalar
      Follow us