தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தலைவர்கள் சொல்வது என்ன?

தலைவர்கள் சொல்வது என்ன?

தலைவர்கள் சொல்வது என்ன?


ADDED : பிப் 28, 2024 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசை இல்லை

ம.ஜ.த.,வுக்கு மனசாட்சி என்பதே இல்லை. மதச்சார்பற்ற என பெயர் வைத்துக் கொண்டு, பா.ஜ.,வுடன் சேர்ந்து கொண்டவர்களுக்கு மனசு இருக்குமா? நாங்கள் யாருக்கும் ஆசை வார்த்தை கூறி இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. சோமசேகருக்கு நன்றி.

சித்தராமையா, முதல்வர்

தாய்க்கு துரோகம்

காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டதன் மூலம், தன்னை தேர்வு செய்த மக்களை சோமசேகர் ஏமாற்றி உள்ளார். அரசியல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மீதும், சிவராம் ஹெப்பார் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தாய்க்கு துரோகம் செய்துவிட்டார்.

அசோக், எதிர்க்கட்சித் தலைவர், சட்டசபை

மேலும் பலம்

தேர்தல் நடைமுறையில் கட்சி மாறி ஓட்டுப் போடுவதை அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் தான். அரசியல் சாசனம் பற்றி பேசும் காங்., தலைவர்கள், அரசியலுக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். ராஜ்யசபா தேர்தல் மூலம், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி மேலும் பலம் பெற்றுள்ளது.

குமாரசாமி, முன்னாள் முதல்வர், ம.ஜ.த.,

கடும் நடவடிக்கை

காங்கிரஸ் ஜனநாயகத்துக்கு துரோகம் செய்துள்ளது. ஆதரவு தெரிவித்த அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் நன்றி. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் மீது, கட்சி சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விஜயேந்திரா, மாநில தலைவர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us