ரூ.2 கோடி அசையா சொத்து; கார் மட்டும் 3 இருக்கு; வினேஷ் போகத் சொத்து இவ்வளவுதான்!
ரூ.2 கோடி அசையா சொத்து; கார் மட்டும் 3 இருக்கு; வினேஷ் போகத் சொத்து இவ்வளவுதான்!
ADDED : செப் 12, 2024 01:05 PM

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி உள்ள முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அதிக எடை உள்ளதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அரசியலில் குதித்துள்ளார். சமீபத்தில் காங்கிரசில் இணைந்த அவர், ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதற்காக தாக்கல் செய்த வேட்புமனு மூலம் அவரின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.
இதன்படி அவருக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வோல்வோ எக்ஸ்சி60 கார், 12 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கிரேடா கார், ரூ.17 லட்சம் மதிப்புள்ள டொயட்டா இன்னோவா கார் என 3 கார்கள் உள்ளன.
அதில் ஒரு கார் கடன் பெற்று வாங்கி உள்ளார். அதற்காக வட்டி செலுத்தி வருகிறார்.
2023- 24 நிதியாண்டில் ரூ.13,85,000 வருமானம் வந்துள்ளது. இதற்காக ரூ.1.95 லட்சம் வரி கட்டி உள்ளார்.
ரூ. 2 கோடி மதிப்புள்ள அசையா சொத்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

