ADDED : டிச 31, 2024 05:23 AM
மஹாலட்சுமி லே - அவுட்: சோப்பு நிறுவனத்தில் ஊழியர் தற்கொலை செய்த வழக்கில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பெங்களூரு மஹாலட்சுமி லே - அவுட்டில், அரசின் சந்தன சோப்பு உற்பத்தி நிறுவனம் உள்ளது. இங்கு அமுர்த் சரியூர், 28, என்பவர், வேலை பார்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று, தொழிற்சாலையிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மஹாலட்சுமி லே - அவுட் போலீசார் விசாரணையை துவக்கினர்.
முதல் கட்டமாக, அவரது நண்பர்கள், சக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொழிற்சாலையின் இயக்குனர், அமுர்த்திற்கு அதிகமாக பணி அழுத்தம் கொடுத்து உள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சிலர் கூறினர். இதன்படி, போலீசார் விசராணயை தீவிரப்படுத்தி உள்ளனர். பல கோணத்தில் விசாரிக்கின்றனர்.