sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஸ்டெர்லைட் ஆலை செய்த விதிமீறல் என்ன? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

/

ஸ்டெர்லைட் ஆலை செய்த விதிமீறல் என்ன? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

ஸ்டெர்லைட் ஆலை செய்த விதிமீறல் என்ன? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

ஸ்டெர்லைட் ஆலை செய்த விதிமீறல் என்ன? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!


ADDED : பிப் 23, 2024 12:49 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'என்ன விதிமீறல் நடந்தது என்பதை தெளிவாக குறிப்பிடாமல் தொழிற்சாலையை மூடுவது, அதில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை பாதிக்கிறது' என, துாத்துக்குடி ஸ்டெர்லைட் உருக்காலை வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் நேற்று கருத்து தெரிவித்தது.

தமிழகத்தின் துாத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதாக, அப்பகுதி மக்கள் 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணை


அப்போது, 2018, மே 22ல் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் பொதுமக்கள் தரப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் உருக்காலையை மூட, தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2018, மே 28ல் உத்தரவிட்டது.

ஆலையை திறக்க கோரி வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த 14ம் தேதி நடந்த விசாரணையின் போது, மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவை அமைக்க பரிந்துரைத்தது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, 'இந்த சமூகத்தின் நலனையும், மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை' என, தெரிவித்தது.

இந்நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்துது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிடுகையில், ''ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடவில்லை. சுற்றுச்சூழலை கருத்தில் வைத்து ஆலையை இயக்க அனுமதி மறுத்துள்ளது. இந்த ஆலை பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது,'' என்றார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது:

வீதிமீறல் என்றால் என்ன மாதிரியான விதிமீறல் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஒரு ஆலையை மூடுவது அதில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை பாதிக்கிறது.

நீங்கள் ஒரு தொழிற்சாலையை மூடும்போது குறிப்பிடப்படாத விதிகளை மீறியதற்காக மூடியதாக சொல்ல இயலாது.

அதேநேரம், அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்ட விதிகளுக்கு மட்டுமே இணங்குவோம் என, ஒரு நிறுவனம் கூற முடியாது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் இயங்க என்னென்ன சட்டங்கள் உள்ளதோ, அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது எனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்.

பாதிப்பு


இந்த நாட்டில் சட்டம் இல்லாதது பிரச்னை அல்ல; சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தான் பிரச்னை உள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியங்களில் தேவையான பணியாளர்கள் இல்லை. பணியை திறம்பட செய்வதிலும் அவர்களுக்கு ஊக்கம் இல்லை.

ஸ்டெர்லைட் ஆலையால் சரிசெய்ய முடியாத பாதிப்பு ஏற்படுகிறது என்பதை தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால், ஆலையை மூடுவதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதை தொடர்ந்து, 'பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்ட தாமிர கழிவுகள் அகற்றப்பட்டனவா' என, தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் வைத்தியநாதன், ''இப்போதும், 11 இடங்களில் தாமிர கழிவுகள் அகற்றப்படவில்லை,'' என, கூறினார்.

''ஆலையை 2018ல் மூடப்பட்டது. இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள். மாநில அரசுக்கு பொறுப்பில்லையா?'' என, கேள்வி எழுப்பினார்.

''வேதாந்தா குழுமத்துக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்குவதாகவும், அவர்கள் கழிவுகளை அகற்றவில்லை எனில், மாநில அரசே அதை அகற்றிவிட்டு அதற்கான செலவை, அந்நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கும்,'' என்றார்.

இது குறித்து வேதாந்தா தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, குறிப்பிட்ட 11 இடங்களும், கழிவுகளை சேகரிக்கும் நிலங்களாக பயன்படுத்தப்பட்டதாகவும், இதுவரை அதுகுறித்து புகார் வரவில்லை என்றும், வேதாந்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் தெரிவித்தார்.

வாதங்கள் முடிவடையாததால் விசாரணை வரும் 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us