ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் எப்போது ? தேர்தல் ஆணையம் ஆலோசனை
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் எப்போது ? தேர்தல் ஆணையம் ஆலோசனை
ADDED : ஆக 08, 2024 06:48 PM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு சட்டசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இன்று தலைமைதேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது.
ஜம்மு-காஷ்மீருக்கு வரும் செப்.30-ம் தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சாந்து ஆகியோர் இன்று (ஆக.08 ) முதல் ஆக10-ம் தேதி வரை 3 நாள் முகாமிட்டு ஆலோசனை நடத்த உள்ளனர்.
அதன்படி இன்று ஶ்ரீநகர் வந்த தேர்தல் ஆணையர்கள் உள்ளூர் அதிகாரிகளை சந்தித்து புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்த ஆலோசனை நடத்தினர். பின்னர் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
முன்னதாக தேர்தல் நடத்துவதற்கான பாதுகாப்பு சூழ்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம், தலைமைத் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிக்கை தந்த பின்னர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.