ADDED : பிப் 13, 2025 10:06 PM
புதிய அரசு பதவியேற்கும் விழாவை எங்கே நடத்துவது என்பது குறித்து மாநில பா.ஜ., தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
ஜவஹர்லால் நேரு மைதானம் அல்லது ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடத்துவது குறித்து மாநிலத் தலைவர்கள் ஆலோசித்தனர். பதவியேற்பு விழாவை, ஒரு பிரமாண்டமான வெற்றி விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநில மூத்த தலைவர் ஒருவர் கூறியது:
எங்கள் ஆலோசனையில் சில இடங்களைப் பற்றி விவாதித்தோம். ஆனால் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
பதவியேற்பு விழாவிற்கான திட்டங்கள் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்வதில் கட்சியின் கவனத்தை வெளிப்படுத்தும் வகையில் இது பிரமாண்டமாக இருக்குமா அல்லது எளிமையானதாக இருக்குமா என்பதை தேசியத் தலைமை முடிவு செய்யும்.
பா.ஜ., ஆளும் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அழைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

