ADDED : ஜூலை 16, 2025 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ரோஹிணி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வழக்கறிஞர்களின் எழுத்தர்கள், வெள்ளைச் சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து, தங்களை வழக்கறிஞராக காட்டிக் கொள்கின்றனர். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, எழுத்தர் மற்றும் பொதுமக்கள் ரோஹிணி மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு வரும் போது வெள்ளைச் சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து வர தடை விதிக்கப்படுகிறது. வழக்கறிஞர்களின் தொழில்முறை அடையாளம் மற்றும் கண்ணியத்தின் அடையாளமாக இந்த உடை ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, எழுத்தர்கள் அடையாள அட்டை பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.

