ADDED : செப் 18, 2025 11:31 PM

ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டில் தேர்தல் கமிஷன் யாரை பாதுகாக்க முயல்கிறது? ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைப்புகளை, பா.ஜ., வெற்றிடமாக்கி வருகிறது. இது, தேர்தல் முறையை சிதைக்கும் செயல். நம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைக்க செய்யும் இதுபோன்ற அமைப்பை, பா.ஜ.,வால் உருவாக்க முடியுமா?
மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்கிரஸ்
நடிப்பை நிறுத்துங்கள்!
லோக்சபா தேர்தல் நிறைவடைந்து எட்டு மாதங்களுக்குபின், ஓட்டு திருட்டு புகாரை, காங்., மூத்த தலைவர் ராகுல் சுமத்துவது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் மீது குற்றஞ்சாட்டும் இதுபோன்ற நடிப்பை நிறுத்துங்கள்.
ஷைனா தேசிய செய்தித் தொடர்பாளர், சிவசேனா
தேச பாதுகாப்புக்கு பின்னடைவு!
பாக்., - சவுதி அரேபியா அரசுகள் இடையே போடப்பட்டுள்ள ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம், நம் தேச பாதுகாப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இது, சந்தேகத்திற்கு இடமின்றி கவலைக்குரிய விஷயம். நம் பிரதமரின் ஆளுமை சார்ந்த ராஜதந்திர நடவடிக்கைக்கு விழுந்த மற்றொரு அடியாகவே இதை கருத வேண்டும்.
ஜெய்ராம் ரமேஷ் தேசிய செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்