sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீங்க மல்யுத்தம்னா... நாங்க பைலட்டு! பட்டைய கிளப்பும் ஜூலானா தொகுதி

/

நீங்க மல்யுத்தம்னா... நாங்க பைலட்டு! பட்டைய கிளப்பும் ஜூலானா தொகுதி

நீங்க மல்யுத்தம்னா... நாங்க பைலட்டு! பட்டைய கிளப்பும் ஜூலானா தொகுதி

நீங்க மல்யுத்தம்னா... நாங்க பைலட்டு! பட்டைய கிளப்பும் ஜூலானா தொகுதி

2


ADDED : செப் 11, 2024 08:31 AM

Google News

ADDED : செப் 11, 2024 08:31 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்; பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு எதிராக முன்னாள் பைலட்டை வேட்பாளராக களம் இறக்கி பா.ஜ., அதிரடி காட்டி உள்ளது.

கடும்போட்டி


ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்கிறது. பா.ஜ., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் இந்த தேர்தலில் இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தேர்தல் பிரசாரத்திலும் இரு கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

வேட்பாளர்கள்


இந் நிலையில், 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ., வெளியிட்டு உள்ளது. அதில் காங்கிரஸ் வேட்பாளரும், பிரபல மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத்துக்கு எதிராக ஜூலானா தொகுதியில் யார் பா.ஜ., வேட்பாளராக களம் இறங்குவார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

வந்தே பாரத்


வேட்பாளர் பெயர் கேப்டன் யோகேஷ் பைராகி. 35 வயதான இவர் ஏர் இந்தியாவில் விமான பைலட்டாக பணியாற்றியவர். நாட்டு மக்களால் மறக்கமுடியாத வந்தே பாரத் திட்டத்தால் வெகுவாக அறியப்பட்டவர். கொரோனா காலகட்டம், சென்னை வெள்ளம் போன்ற இடர்பாடுகளின் போது பணியாற்றியவர், வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வர எடுக்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தில் சிறப்பாக சேவை செய்தவர். ஹரியானா பா.ஜ.,வில் மாநில இளைஞர் அணியின் துணைத்தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

அபிமானம்


பிரதமர் மோடி மீது மிகுந்த அபிமானம் கொண்ட யோகேஷ், வந்தே பாரத் திட்டத்தின் வெற்றி காரணமாக தம்மை பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டவர். ஹரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டம், சபிடனில் வசித்து வருகிறார் யோகேஷ்.

கவனம்


காங்கிரஸ் தரப்பில் வினேஷ் போகத், பா.ஜ., தரப்பில் யோகோஷ் பைராகி இரு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் தற்போது களத்தில் உள்ளனர். இதனால் மாநிலத்தின் மற்ற தொகுதிகளையும் விட இவர்கள் களம் காணும் ஜூலானா தொகுதியை பற்றியே பலரின் கவனமும் திரும்பி உள்ளது.






      Dinamalar
      Follow us