மகதாயி குடிநீர் திட்டம் பின்னடைவுக்கு காரணம் யார்?
மகதாயி குடிநீர் திட்டம் பின்னடைவுக்கு காரணம் யார்?
ADDED : பிப் 26, 2024 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹூப்பள்ளி: ''மகதாயி குடிநீர் திட்டத்தின் பின்னடைவுக்கு, காங்கிரசே காரணம்,'' என பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டினார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் கூறியதாவது:
மகதாயி குடிநீர் திட்டத்தின் பின்னடைவுக்கு, காங்கிரசே காரணம். மகதாயி திட்டம் தொடர்பாக, தீர்ப்பாயத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது, தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இதன் விளைவாக, மகதாயி திட்டம் எட்டு, 10 ஆண்டுகள் தாமதமானது.
மகதாயி விஷயத்தில், காங்கிரஸ் பெரிய குற்றம் செய்துவிட்டது. நாங்கள், மகதாயி - மல்லபிரபா இடையே, இணைப்பு கால்வாய் கட்டினோம். கால்வாயில் சுவர் கட்டிய அவப்பெயர் காங்கிரஸ் மீது உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

