சோனியாவின் செல்லம் யார்? ராகுல் வெளியிட்ட புகைப்படம் வைரல்
சோனியாவின் செல்லம் யார்? ராகுல் வெளியிட்ட புகைப்படம் வைரல்
ADDED : ஆக 24, 2024 05:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தாயார் சோனியாவிற்கு பிடித்தமானவர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட சமூக வலைதள பதிவு வைரலாகி உள்ளது.
நாய் ஒன்றை சோனியா முதுகில் வைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ராகுல், அம்மாவின் செல்லம் யார்? நிச்சயம் நூரி ( நாயின் பெயர்) எனக்கூறியுள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த புகைப்படத்திற்கு 5,968 பேர் கருத்து தெரிவத்து உள்ளனர். 8.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ‛லைக்' போட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு கோவாவின் மபுசா நகரில் நூரியை வாங்கிய ராகுல், உலக விலங்குகள் தினத்தில் சோனியாவுக்கு பரிசாக அளித்தார். அது குறித்த வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

