sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யார் இந்த நஹித் இஸ்லாம்

/

யார் இந்த நஹித் இஸ்லாம்

யார் இந்த நஹித் இஸ்லாம்

யார் இந்த நஹித் இஸ்லாம்

6


ADDED : ஆக 07, 2024 02:19 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:19 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வங்கதேசம் பாக்ஸ் செய்திகள்

யார் இந்த நஹித் இஸ்லாம்?

வங்கதேசத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர், நஹித் இஸ்லாம். டாக்கா பல்கலையில் சமூகவியல் துறையின் மாணவரான இவர், மனித உரிமைகளுக்காகவும் போராடி வருகிறார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய, 'பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள்' அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக, நஹித் இஸ்லாம் உள்ளார். இவர், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஜூலையில் மர்ம நபர்களால் இருமுறை நஹித் இஸ்லாம் கடத்தப்பட்டார்.



வங்கதேச கலவரம்

அமெரிக்கா கருத்துவங்கதேச கலவரம் குறித்து, அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது:வங்கதேச நிலவரத்தை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது. அங்கு இடைக்கால அரசு தொடர்பான அனைத்து முடிவுகளும் ஜனநாயக விதிமுறைகள் மற்றும் வங்கதேச மக்களின் விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டும். வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம். இந்த நேரத்தில் வங்கதேச மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.



'என் தாய் அடைக்கலம் கேட்கவில்லை'

அமெரிக்காவில் வசிக்கும், ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜேத் ஜாய் கூறியதாவது:வங்கதேசத்தை விட்டு வெளியேற என் தாயார் ஷேக் ஹசீனா ஒருபோதும் விரும்பவில்லை. நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து, அவரது பாதுகாப்பு கருதி, நாட்டை விட்டு வெளியேறும்படி நாங்கள் தான் வலியுறுத்தினோம். கனத்த இதயத்துடனேயே, அவர் வெளியேறினார். மாணவர்கள் போராட்டத்தால் பெரிய அளவில் படுகொலைகள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே பதவியை ராஜினாமா செய்தார்.எந்த நாட்டிடமும் அவர் அடைக்கலம் கேட்கவில்லை. இதுகுறித்து வதந்தி பரப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



ஹோட்டலுக்கு தீ வைப்பு

24 பேர் உயிரிழப்புவங்கதேசத்தின் ஜெஸ்சோர் மாவட்டத்தில், அவாமி லீக் கட்சி நிர்வாகி ஷாஹின் சக்லதாருக்குச் சொந்தமான, ஜாபிர் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ மற்ற தளங்களுக்கும் மளமளவென பரவியது. இந்த விபத்தில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.



முன்பே கணித்த ஹசீனா

கடந்த மே மாதத்தில், பேட்டி ஒன்றில் ஷேக் ஹசீனா கூறியதாவது:ஒரு நாட்டின் விமானப்படை தளத்தை, வங்கதேசத்தில் அமைக்க அனுமதி அளிக்கும்படி, 'வெள்ளை மனிதர்' ஒருவரிடம் இருந்து எனக்கு கோரிக்கை வந்தது. அந்த நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தெரிவிக்க முடியாது. இதற்கு அனுமதி அளித்திருந்தால் எனக்கு எந்த பிரச்னையும் வந்திருக்காது. என் அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்படுகிறது. என் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டது போல நானும் படுகொலை செய்யப்படலாம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.



பஸ் சேவை ரத்து

மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்தின் டாக்காவுக்கு நேற்று, 50க்கும் மேற்பட்ட பயணியருடன் பஸ் சென்றது. இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த 45 பேர் இருந்தனர். இந்தியா - வங்கதேச எல்லையான பெட்ராபோல் என்ற பகுதியில் பஸ் வந்த போது தடுத்து நிறுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வங்கதேச பயணியர் உட்பட அனைவரும் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டனர். 'எல்லை பகுதிக்குசெல்ல வேண்டாம்'வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அதை ஒட்டியுள்ள நம் எல்லை பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என உள்ளூர் மக்களுக்கு பி.எஸ்.எப்., எனப்படும் இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியுள்ள வங்கதேச எல்லை பகுதியில் உள்ள கள நிலவரங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் எல்லை பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள அதிகாரிகளிடம், வங்கதேச எல்லை வழியாக ஊடுருவல்காரர்கள் உள்ளே வருவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படியும் உத்தரவிட்டார். நம் நாட்டின் மேற்கு வங்கம், திரிபுரா, மேகாலயா, அசாம், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்கள் வங்கதேச எல்லையில் உள்ளன. இதையடுத்து, வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக யாரும் ஊடுருவாமல் தடுக்கம் வகையில் இந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



ஹிந்துக்களை குறிவைத்து தாக்குதல்

வங்கதேச கலவரத்தின்போது ஹிந்துக்களை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதுடன், பல கோவில்களையும் சேதப்படுத்தினர். இதுதவிர அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த இரண்டு ஹிந்து மத தலைவர்களையும் வன்முறையாளர்கள் கொன்றுள்ளனர். இதுகுறித்து வங்கதேச ஹிந்து, புத்த, கிறிஸ்துவ மத நல்லிணக்க கவுன்சில் தலைவர் கஜோல் தேவநாத் கூறுகையில், “வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள், கடும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி அனைவரின் மீது தாக்குதல்களை வன்முறையாளர்கள் அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக, ஹிந்துகளை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க ராணுவத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல் “வங்கதேசத்தில் கலவரக்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினரை காக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மத்திய அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “வங்கதேசத்தில் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, அங்கு அரங்கேறி வரும் மனித உரிமை மீறல்களை தடுக்க, சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த சூழலில், நம் நாட்டு எல்லைக்குள் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் உள்ளே நுழைவதை தடுக்க தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.



எவ்வளவு?

வங்கதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் கலவரத்தில் 366 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.'பலி எண்ணிக்கை 366 தானா?' என, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அபு ஹென்னா ரசாக்கியிடம் கேட்டதற்கு, ''குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. அப்படி சொன்னால் அது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும். செய்தியில் இடம் பெற்றுள்ளதை விட பலி எண்ணிக்கை நிச்சயம் அதிகம்,'' என்றார்.டாக்காவை சேர்ந்த மூத்த செய்தியாளர் அனிஸ் ஆலம்கிர் கூறுகையில், ''வெளியான தகவலை விட பலி எண்ணிக்கை நிச்சயம் இரண்டு மடங்காக இருக்கும்,'' என்றார்.இதற்கிடையே, ஹசீனா நாட்டை விட்டுச் சென்ற பின், நேற்று முன்தினம் மட்டும், நாடு முழுதும் நடந்த வன்முறை சம்பவங்களில் 110 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.








      Dinamalar
      Follow us